சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014

புதிய போட்டோஷொப்பில் வீடியோ எடிட்டிங்


புகைப்படங்களை எடிற் செய்ய பயன்படுத்தப்படும் பிரபல மென்பொருளான போட்டோஷொப் மென்பொருளின் புதிய வெளியீடான போட்டோஷொப் சிஎஸ் 6 இனை அடோப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பொதுமக்களுக்கான பீட்டா வெளியீடாக வெளியிடப்பட்டுள்ள இந்த வெளியீட்டில் வீடியோக்களின் வர்ணங்களையும், அவற்றின் கறுப்பு வெள்ளை விகிதத்தையும் மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புதிய பதிப்புத் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அடோப் நிறுவனத்தில் போட்டோஷொப் உற்பத்தி முகாமையாளர்களில் ஒருவரான ஷொனைத கீ, கடந்த சில வருடங்களாக புகைப்படங்களும், வீடியோக்களும் இணைந்தவாறான நிலை ஏற்பட்டு வருவதாகவும், புதிய புகைப்படக் கமெராக்கள் வீடியொ வசதியை வழங்குவதன் காரணமாக வீடியோக்களை எடிற் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் புகைப்படங்களுக்கு மாத்திரம் எனக் காணப்பட்ட கருவிகள் தற்போது வீடியோக்களுக்கு முக்கியத்துவம் வழங்கி வருவதன் காரணமாக வீடியோக்களுக்கான வசதியை உள்ளடக்கத் தீர்மானித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய பதிப்பில் வீடியோக்களை எடிற் செய்யும் வசதி பின்வரும் முக்கிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

முன்பை விட புகைப்படங்களை சிறப்பாக மேம்படுத்த அதிகமான கருவிகள்.

புகைப்படங்களை மங்கலாக்கும் வசதியில் மேம்படுத்தப்பட்ட வடிவம்.

எடிட் செய்வதற்கான இடைமுகம் மேம்படுத்தப்பட்டு புதிய வடிவில் காணப்படுகிறது.

புகைப்படங்களை வெட்டும் வசதியில் மேம்படுத்தப்பட்ட புதிய வடிவம். புகைப்படங்களை வெட்டும் போது புகைப்படத்தில் அளவு திரைக்கேற்றவாறு மாறுவதற்கு வழி செய்யப்பட்டுள்ளது.

புகைப்படங்களில் எழுத்துக்களை தட்டச்சும் போது புதிய வடிவில் இலகுவாக மேம்படுத்தப்பட்ட வடிவில் தட்டச்ச வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புதிய போட்டோஷொப்பின் பீட்டா வடிவத்தை அடோப் நிறுவனத்தின் உத்தியோகபூர்வத் தளத்தில் இலவசமாகத் தரவிறக்கி பரிசோதனைக் காலம் நிறைவடையும் வரை பயன்படுத்தலாம். (க்ரிஷ்)
Views: 4866

Comments   

 
-0 +0 # himas 2012-05-21 21:54
இவ்வறான புதிய மென்பொருட்களை தயாரிப்பதன் காரணமாக
புகைப்படம் எடுக்கும் தொழிலாளர்களுக்கும்இ மற்றும் ஏனைய
மென் பொருள் இயக்குனர்களுக்கும் மிகவும் வசதியாக இருக்கும் என நான் நம்புகிறேன்.

மேலும் இவ்வாறான பல மென் பொருட்களை தயாரிப்பதற்கு வாழ்த்துக்கள்
Reply
 

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.