.
வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014

அன்ட்ரொய்டிற்கான இன்ஸ்ராகிராம் விரைவில்

பிரபலமான புகைப்படப் பகிர்வு மென்பொருளான "இன்ஸ்ராகிராம்" மிகவிரைவில் அன்ட்ரொய்ட் இயங்கு தளங்களுக்கும் கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அறிவித்தலை அந்நிறுவனம் கடந்த டிசெம்பரிலேயே விடுத்திருந்த போதிலும் எப்போது அது வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் தற்போது இன்ஸ்ராகிராம் நிறுவனம் அன்ட்ரொய்ட் பயனாளர்களை தங்களது தளத்தில் பதிவுசெய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. அந்தத் தளத்தில் பதிவுசெய்யும் போது பயனாளர்களுக்கு வெளியீடு தொடர்பாக அறிவித்தல் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

தற்போது ஐபோன்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள இன்ஸ்ராகிராம், 27 மில்லியன் பதிவுசெய்யப்பட்ட பயனாளர்களைக் கொண்டு காணப்படுகிறது.

ஐபோன்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சிறிய மாற்றங்களைச் செய்து அழகாக்கி பகிரப் பயன்படும் இம்மென்பொருள், பிரபலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அன்ட்ரொய்ட்டிற்கான இன்ஸ்ராகிராம் பற்றிக் கருத்துத் தெரிவித்த இன்ஸ்ராகிராமின் இணை உருவாக்குநர் கெவின் சிஸ்ட்ரோம், ஐபோனுக்கான இன்ஸ்ராகிராமை விட அன்ட்ரொயிட்டிற்கான இன்ஸ்ராகிராம் சிறப்பானதாக அமைந்து வருவதாகத் தெரிவித்தார்.

பதிவுசெய்ய விரும்பும் பயனாளர்கள் http://instagr.am/android என்ற முகவரிக்குச் சென்று தங்களைப் பதிந்து கொள்ளலாம். (க்ரிஷ்)
Views: 3378

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.