வரலாற்றில் இன்று: மார்ச் 06
06-03-2012 01:14 AM
Comments - 0       Views - 610

 

1946: பிரெஞ்சு யூனியனின்  இந்தோசைனா சம்மேளனத்தில் ஒரு சுயாதீனமாக வியட்நாம் இருப்பதை அங்கீகரிக்கும் ஒப்பந்தத்தில் பிரான்ஸுடன் ஹோ சி மின் கையெழுத்திட்டார்.

1953: சோவியத் யூனியனில்  ஜோசப் ஸ்டாலினுக்குப் பின்னர் ஜோர்ஜி மக்ஸிமிலியானோவிக் பிரதமரானார்.

1964: அமெரிக்காவின் இஸ்லாமிய தேசியம் எனும் அமைப்பு குத்துச்சண்டை சம்பியன் கஸியஸ் கிளேவுக்கு முஹமட் அலி என்ற பெயரை உத்தியோக பூர்வாமக வழங்கியது.

1964: கிறீஸில் இரண்டாம் கொன்ஸ்டைன் மன்னரானார்.

1967: சோவியத் யூனியனின் முன்னாள் அதிபர் ஜோசப் ஸ்டாலினின் மகள் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தார்.

1975: ஈரான், ஈராக் நாடுகளுக்கிடையிலான எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அல்ஜியர்ஸ் உடன்படிக்கை கெயெழுத்திடப்பட்டது.

1987: பிரித்தானிய கப்பலொன்று குடை சாய்ந்ததால் 193 பேர் பலி.
 

"வரலாற்றில் இன்று: மார்ச் 06" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty