ரமழான் சிந்தனை – 24 (சத்தியத்தின் பால் அழைத்தல்)
24-08-2011 10:57 PM
Comments - 0       Views - 667

 

இஸ்லாம் சத்திய மார்க்கம். அது உலகத்தை படைத்த இரட்சகனின் மார்க்கம். முழுமனித சமுதாயத்திற்குமான நேர்வழி இஸ்லாத்தில் உள்ளது.

 நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம் என அல்குர்ஆன் கூறுகிறது. சத்திய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் நேர்வழி எதுவென்று தெரியாமல் வழிகேட்டில் வாழும் ஏனைய மனிதர்களை சத்தியத்தை நோக்கி அழைப்பு விடுக்க வேண்டும்.

தான் பெற்ற நேர்வழியை ஏனையவர்களும் பெற வேண்டும் என்பதில் ஒரு முஸ்லிம் மிகவும் கவனமாக இருப்பார். அதனை நோக்கி அழைப்பதற்கு விரைந்து செயற்படுவார். இத்தகைய அழைப்புப் பணியில் ஈடுபடும் முஸ்லிமுக்கு ஏராளமான வெகுமதிகள் காணப்படுகின்றன.

அலி (ரழி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஒரு மனிதருக்கு உம்மூலமாக அல்லாஹ் நேர்வழி கிடைக்கச்செய்வது உமக்கு உயர்ரக செந்நிற ஒட்டகைகளை விட மேலானதாகும்'.

வாழ்க்கையின் நோக்கம், உலகில் மனிதனின் பணி என்பன பற்றிய தெளிவான போதனைகளை உள்ளடக்கியுள்ள மார்க்கம் இஸ்லாம். இ;த்தகைய தெளிவான பாதையை நோக்கி அழைப்பு விடுப்பதே முஸ்லிம் சமூகம் உலகில் தோற்றுவிக்கப்பட்டதன் நோக்கமாகும். இந்த உயர்ந்த நோக்கத்தைப் புரிந்து சத்திய பாதையில் அழைப்பு விடுப்பதற்கு நாம் அனைவரும் முன்வருவோமாக.

தொகுப்பு:

அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.அரபாத் கரீம் (நளீம்)
விரிவுரையாளர்
ஜாமியா நளீமியா கலாபீடம் - பேருவளை

நாளைய (25) தொழுகை நேரங்கள்:

ஸஹர் முடிவு: 04:31

சுபஹ்: 04:46

சூரிய உதயம்: 06:04

லுஹர்: 12:14

அஸர்: 03: 25

மஃரிப்: 06:22

இஷா: 07:34

"ரமழான் சிந்தனை – 24 (சத்தியத்தின் பால் அழைத்தல்)" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty