ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014

ஷாருக்கான் தடுப்பு விவகாரம்; இந்தியாவிடம் மன்னிப்பு கோரியது அமெரிக்க தூதரகம்

அமெரிக்காவில் நியூயோர்க் விமான நிலையத்தில் வைத்து பொலிவூட் நடிகர் ஷாருக்கான் தடுத்து வைக்கப்பட்ட விவகாரத்தில், அமெரிக்காவிடம் விளக்கம் கேட்டுள்ளது இந்தியா. இதைத் தொடர்ந்து அமெரிக்க தூதரகம் மன்னிப்பு கோரியுள்ளது.

யேல் பல்கலைக்கழக நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக நடிகர் ஷாருக்கான் தனியார் விமானத்தில் அமெரிக்கா சென்றிருந்தார்.

இதன்பொது விமான நிலைய குடியேற்ற அதிகாரிகளால் அவர் 2 மணித்தியாலம் தடத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பின்பு இந்தியத் தூதரகம் தலையிட்டு அவரை விடுவித்தது. இதையடுத்து இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் மன்னிப்புக் கடிதம் ஒன்றை வழங்கினர்.
Views: 3003

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.