திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014

உலகம் உள்ள வரை வாலியின் தமிழ் வாழும்: ரஜினி


தமிழ்த்திரை உலகில் எந்த வகையான பாடல்களையும் எழுத முடியும் என்பதை பல தடவை நிரூபித்தவர் கவிஞர் வாலி. அவர் தன்னம்பிக்கை தரும் பாடல்கள், காதல் பாடல்கள் மட்டுமே எழுதவில்லை. ஆன்மீக பாடல்கள் எழுதுவதிலும் தனித்துவம் பெற்றிருந்தார்.

அன்றைய நடிகர் மக்கள் திலகம் எம்.ஜீ.ஆர் தொடங்கி இன்றைய இளம் நடிகர் சிவகார்த்திகேயன் வரை அனைவருக்கும் அனத்து விதமான ரசனை உள்ளங்களுக்கும் தெவிட்டாத கவியை தந்தவர் என்றால் அது கவிஞர் வாலியால் மட்டுமே முடியும்.
 
இதனால் தான் 'உலகம் உள்ளவரை கவிஞர் வாலியின் தமிழ் வாழும்' என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளார் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் பன்முகத் திறமைகளாலும் பண்பட்ட குணத்தாலும் கோலோச்சிய கவிஞர் வாலியின் மரணம், எல்லோரையும் உலுக்கிப் போட்டுள்ளது.

இலக்கியம், திரையுலகம், அரசியல் என அனைத்துத் தரப்பிலிருந்தும் ஆளுமைகள், வாலிக்கு நேரில் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கவிஞர் வாலி அதிகம் பாட்டெழுதிய நாயகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. ரஜினியின் இயல்பை மனதில் வைத்து அவர் படிக்காதவன் திரைப்படத்தில் எழுதிய ராஜாவுக்கு ராஜா நான்டா... பாடல் ரஜினிக்கு எப்போதும் விருப்பமான பாடல்.

ரஜினிக்கு சிவாஜி - தி பாஸ் வரை தொடர்ந்து பாடல் எழுதிய கவிஞர் வாலி, அடுத்து வெளியாகவிருக்கும் கோச்சடையான் திரைப்படத்திலும் பாடல் எழுதியுள்ளார். மறைந்த கவிஞர் வாலிக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார் ரஜினி.

வாலி குறித்து அவர் கூறுகையில், 'அவரைப் பற்றிச் சொல்ல வார்த்தைகள் வரவில்லை. உயர்ந்த மனிதர். அருமையான கவிஞர். இந்த உலகம் உள்ள வரை அவர் தமிழும் புகழும் வாழும்' என்றார்.

Views: 3348

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.