.
புதன்கிழமை, 26 நவம்பர் 2014

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் தேரோட்டம்

 

(கே.எஸ்.வதனகுமார்)

கல் நந்தி எழுந்த புல்லுண்டு சாணமிட்டு வெள்ளையர்களை புறமுதுகு காட்டி ஓடவைத்த வரலாற்றுப் பெருமை மிக்க கிழக்கிலே தேரோடும் ஆலயமான கொக்கட்டிச்சோலை திருத்தான்தோறீஸ்வரர் ஆலய தேரோட்டப் பெருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா !அரோகரா! பக்தி ஆரவாரத்தின் மத்தியில் இடம்பெற்றது.

வெள்ளையர்களால் ஈழத்தில் இந்து ஆலயங்கள் உடைத்துத் தரமட்டமாக்கப்பட்ட போது இவ் ஆலயத்தையும் விட்டு வைக்க விரும்பாத வெள்ளையர்கள் ஆலயத்தை உடைக்க வந்தார்கள். குருக்களுடன் வெள்ளையர்களுக்கு இடம்பெற்ற விவாதத்தில் இந்த கல் நந்தி புல்லுண்ணும் என்ற குருக்களின் கூற்றை நிரூபிக்க ஆலயத்தின் கல் நந்தி எழுந்து காலால் மண்ணை எற்றி தனுப்போட்டு கொடுக்கப்பட்ட புல்லை உண்டு வெள்ளையர்களை மெய்மறக்க வைத்து புறமுதுகு காட்டி ஓடவைத்த வரலாற்றுப்பெருமை இவ் ஆலயத்துக்கு உண்டு.

கடந்த 18ஆம் திகதி மாலை விசேட பூசையினைத் தொடர்ந்து தான்தோறீஸ்வரப் பெருமானும் விநாயகப் பெருமானும் பக்தர்களின் அரோகரா!அரோகரா! என்ற பக்தி ஆரவாரத்தின் மத்தியில் வெளிவீதி வந்து தான்தோறீஸ்வரர் சித்திரத் தேரிலும் விநாயகப் பெருமான் விநாயகர்தேரிலும் ஏற பக்தர்கள் வடம்பிடிக்க மணல் வீதியில் ஆடி அசைந்து பக்தர்கள் வெள்ளத்தின் மத்தியில் ஆலயத்தைச் சுற்றி இடம்பெற்ற தேரோட்டம் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.

 

Views: 8946

Comments   

 
-0+0#juvaraj2011-11-13 21:37
good job சிவாயநம.
Reply
 
 
-0+2#juvaraj2011-11-13 21:49
தான்தோன்றீஸ்வரர் துணை.
Reply
 
 
-0+2#Raj2012-01-12 05:25
சிவாயநம என்று சொல்வோருக்கு அபாயம் என்றும் இல்லை
Reply
 
 
-0+2#thilakshan2012-01-24 23:46
சிவாயநம என்று சொல்வோருக்கு அபாயம் என்றும் இல்லை.
Reply
 

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.