2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

தாகூரின் பிறந்ததினத்தையொட்டி பிஷப் கல்லூரியில் நாட்டிய நாடகம்

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 21 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(உதயகார்த்திக், ஆர்.சுகந்தினி)

நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் 150ஆவது பிறந்ததினத்தையொட்டி இந்திய கலாசார நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நாட்டிய நாடகம் கொழும்பு பிஷப் கல்லூரி அரங்கத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது.  

ரவீந்திரநாத் தாகூரினால் எழுதப்பட்ட 'சாப் மோச்சன்' என்ற நாட்டிய நாடகமே பிஷப் கல்லூரி அரங்கத்தில் மேடையேற்றப்படவுள்ளதாக இந்திய கலாசார நிலையத்தின் பணிப்பாளர் எம்.இராமச்சந்திரன் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
 
நீர்ப்பாசன மற்றும் நீர்வழங்கல் முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பிரதம அதிதியாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா கௌரவ விருந்தினராகவும்  கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த நாட்டிய நாடகத்தை பார்வையிடுவதற்கான அனுமதி இலவசமாகும்.

காலி, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலும் இந்த நாடகம் மேடையேற்றப்படவுள்ளன.

இதேவேளை, ரவீந்திரநாத் தாகூரின் 150ஆவது பிறந்ததினத்தையொட்டி ரவீந்திரநாத் தாகூரினினால் வரையப்பட்ட ஓவியங்களின்  கண்காட்சி நடைபெறவுள்ளது. எதிர்வரும் டிசெம்பர் மாதம் 2ஆம் திகதி மாலை 6 மணிக்கு கொழும்பு  - 07 ஹோட்டன் பிளேஸிலுள்ள ஜே.டி.ஏ. பெரேரா அரங்கில்   நடைபெறவுள்ளது. 3ஆம் திகதியிலிருந்து 8ஆம் திகதி வரை முற்பகல் 11 மணியிலிருந்து இரவு 7 மணி வரை இந்த கண்காட்சியை பார்வையிட முடியுமெனவும்

கலாசார விவகார அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்க இந்த கண்காட்சியை ஆரம்பித்து வைக்கவுள்ளதாக இந்திய கலாசார நிலையத்தின் பணிப்பாளர் எம்.இராமச்சந்திரன் குறிப்பிட்டார்.   

ரவீந்திரநாத் தாகூரின் 150ஆவது பிறந்ததினத்தையொட்டி இலங்கையின்  பல பகுதிகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் இந்திய கலாசார நிலையத்தினால் இந்த வருடத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  

ரவீந்திரநாத் தாகூர் இலங்கையுடன் நெருங்கிய பிணைப்பைக் கொண்டிருந்தார். அவர் 1922ஆம் 1928ஆம் 1934ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .