2021 மே 06, வியாழக்கிழமை

'எவ்ளோ பெரிய நடிகர்... என்னை பெருமைப்படுத்துகின்றாரே...!'

George   / 2016 ஜூலை 26 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் தனுஷுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தொடரி. பிரபுசொலமன் இயக்கியுள்ளார். காதல் - அக்ஷன் என இரண்டுவிதமான நடிப்பை தனுஷ் வெளிப்படுத்தியுள்ளார்.

இருந்தாலும், 'நாயகியான கீர்த்தி சுரேஷ்க்குத்தான் தொடரி திரைப்படத்தில் முக்கிய வேடம். அதோடு சூப்பராக நடித்துள்ளார்' என்று தனது நட்பு வட்டாரங்களில் கீர்த்தி சுரேஷைப்பற்றி கூறிவருகிறாராம் தனுஷ்.

இந்த தகவல் கீர்த்தியின் காதுக்கு சென்றபோது தனுஷ் மீது அவர் வைத்திருந்த மதிப்பும் மரியாதையும் இன்னும் உயர்ந்து விட்டதாம்.

'எத்தனை பெரிய நடிகர், தன்னை தாழ்த்திக்கொண்டு என்னை பெருமைப் படுத்துகிறாரே' என்று பெருமிதம் அடைந்தவர், உடனே தனுஷை அலைபேசியில் அழைத்து நன்றி சொன்னாராம்.

அதற்கு தனுஷ், 'நான் உண்மையதானே சொன்னேன். தொடரி திரைப்படத்துல உங்களுடைய நடிப்பு பிரமாதம். அதை சொல்றதுல எனக்கு எந்த தயக்கமும் இல்லை' என்றாராம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .