2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

அநுராதபுரத்தில் வாகன விபத்து: 4 பொதுமக்கள் பலி;8 பேர் காயம்

Super User   / 2010 மே 28 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பொதுமக்கள்  உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், இந்த விபத்துச் சம்பவத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

கொள்கலன் வாகனமொன்றுடன் முச்சக்கர வண்டி மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது.

மேற்படி விபத்து இடம்பெற்றிருந்த வேளையில், முச்சக்கர வண்டியில் 10 பயணிகள் பயணித்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி விபத்தில் உயிரிழந்தவர்களில் முச்சக்கர வண்டியில் பயணித்திருந்த 2 வயதுக் குழந்தையொன்றும், குறித்த குழந்தையின் பெற்றோரும் அடங்குகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--