2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

இந்திய உயர்ஸ்தானிகரின் பயணம் ஒத்திவைப்பு

George   / 2017 மே 29 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை காரணமாக, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரின் வட மாகாண விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்துக்கான விஜயத்தை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து,  நாளையும் நாளை மறுதினமும் மேற்கொள்ளவிருந்தார்.

ஆனால், இந்தியாவிலிருந்து நிவாரணப் பொருட்களுடன் வருகைதந்துள்ள கப்பல்களிலுள்ள பொருட்களை பாதிக்கப்பட்டோருக்குப் பிரித்துக்கொடுக்கும் நடவடிக்கை காரணமாக, அவரது பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகரின் வடமாகாணத்துக்கான விஜயத்தின்போது, கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம், உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படவிருந்தது. அதுமாத்திரமன்றி, பலதரப்பு பேச்சுவார்த்தைகளும் நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய உயர்ஸ்தானிகரின் பயணம் தொடர்பில், மிகவிரைவில் தீர்மானிக்கப்படுமென இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரச் செய்திகள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .