2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

எந்தக்கேள்விக்கும் பதிலளிக்கத்தயார் ; சூளுரைக்கிறார் காதர் ஹாஜியார்

Super User   / 2010 மே 06 , பி.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்


EXCLUSIVE அமைச்சுப்பதவி கிடைத்தாலும்,கிடைக்காவிட்டாலும் அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்கு சேவையாற்ற முடியும்.

இவ்வாறு கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான காதர் ஹாஜியார் என்றழைக்கப்படும்   ஏ.ஆர்.எம்.காதர் தமிழ்மிரர் இணையதளத்துக்கு சற்று முன்னர் தெரிவித்தார்.

அவசர கால சட்டமூல வாக்கெடுப்பில் அரசாங்கத்துக்கு ஆதரவாக காதர் ஹாஜியார் வாக்களித்திருந்தார்.

இதன் காரணமாக அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் செயலாளர் நாயகம் திஸ்ஸ அத்தநாயக்க நேற்று அறிவித்திருந்தார்.

இதுகுறித்து,தமிழ்மிரர் இணையதளம் காதர் ஹாஜியாரிடம் கேள்வி எழுப்பியிருந்தது.
அவர்கள் முதலில் கேள்வியை கேட்கட்டும்.பிறகு நான் பதிலை வழங்குகிறேன் என்று ஏ.ஆர்.எம் காதர் சூளுரைத்தார்.

அரசாங்கத்துடன் இணைந்தால் அமைச்சுப்பதவிகள் எதனையும் எதிர்ப்பார்பீர்களா என்று தமிழ்மிரர் இணையதளம் கேட்டபொழுதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

காதர் ஹாஜியார் விரைவில் அரசாங்கத்துடன் இணைவார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெர்விக்கின்றன.

  Comments - 0

 • The Analyst Friday, 07 May 2010 11:40 AM

  பதவி ஆசை, என்னவும் செய்ய தயார் என்கிறார் காதர் ஹாஜியார் !!!!

  Reply : 0       0

  xlntgson Friday, 07 May 2010 10:04 PM

  சூளுரைக்க இதோ இன்னுமொருவர், மேர்வின் போதாதா ஆளும் கட்சிக்கு? மூத்தவர்கள் அரசியலிலிருந்து விலகும் காலம் சவால் விடும் காலம் அல்ல. தி.மு.பிரதமராகி விட்டதால் இவரும் நினைக்கிறார் போலும் வயது போனாலும் மதிப்பு போகாது என்று! எக்கஷ்டத்திலும் கட்சியை விட்டுப் போகவில்லை என்பதே அவரது பெருமை. கட்சி மாறிய எல்லாரும் பெருமை அடையவில்லை உள்வாங்கி செமிப்பதே கட்சிகளின் குறிக்கோள் ஆகும். கட்சி மாறுதல் இலங்கை அரசியலில் கௌரவமாக கருதப் படுகின்றதா? 24பேர் கட்சி மாறியதில் பாதிப்பேரை மக்கள் நிராகரித்து விட்டனர்.

  Reply : 0       0

  roshaan mohamed Saturday, 08 May 2010 01:15 AM

  ஐ.தே.க.முஸ்லிம்களைப் புறந்தள்ளிவிட்டு பிரிவினை வாதிகளான சம்பந்தர்,ஹகீம் ஆகியோருடன் இணைந்து ரணில் ஐ.தே.க.முஸ்லிம்களுக்குத் துரோகம் இளைப்பதன் காரணமாகவே காதர் ஹாஜியார் இந்நிலைப்பாட்டுக்கு வந்துள்ளார். அவர் எங்கு இருக்கிறார் என்பது முக்கியமல்ல, இனப்பாகுபாடு இன்றி சராசரி அடிமட்ட மக்களுக்கு அவர் செய்யும் சேவையே முக்கியமானதாகும். எனவே,காதர் ஹாஜியார் எடுக்கும் முடிவு மக்கள் நலனுக்கானதேயன்றி அவரது அரசியல் வளத்துக்கானதல்ல என்பதை பூரணமாக நம்பலாம்.

  Reply : 0       0

  nuah Sunday, 09 May 2010 09:27 PM

  முஸ்லிம் அரசியலில் ஹக்கீமுக்கு எவ்வளவு பங்கு இருக்கிறது, காதர் ஹாஜிக்கு எவ்வளவு பங்கு இருக்கிறது என்பதல்ல. ஐ.தே.க.முஸ்லிம் பிரிவு இது ஒரு விதமான மதவாத அரசியலே! ஹெல உறுமயவினது போன்றது. சம்பந்தர் தமிழ்-அரசுக்கொள்கையில் நிற்கிறார், உறுதியாக. அது பிரிவினை அல்ல; அது பிரிவினை என்றால் புலி அரசியலை என்ன வென்பது? கௌரவமான அரசியல் யார் பண்ணினாலும் சரியே, நல்லது. கட்சிமாறி மாறி அரசியல் யாரும் பண்ண மக்கள் அனுமதிக்கக்கூடாது என்பதே எனது வேண்டுகோளாகும். என்ன ரோஷன்? சரியா, தவறா? கட்சிமாறல்களை தடுக்கவேண்டும்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--