2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

ஐ.நா சபையால் யுத்தக் குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால் சாட்சியமளிக்கத் தயார்-சரத் பொன்சேகா

Super User   / 2010 ஜூன் 08 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையினால் இலங்கை மீதான யுத்தக் குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால், இலங்கையின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படாது இருப்பதற்காக வேண்டி அவ்விசாரணையின் போது சாட்சியமளிக்கத் தயார் என்று முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

டெய்லிமிரர் இணையதளத்துடன்  நாடாளுமன்றத்திலிருந்து தொலைபேசி மூலம் பேசிய போதே ஜெனரல் சரத் பொன்சேகா இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கருத்துத் தெரிவித்த  அவர், கடந்த யுத்தத்தின் போது இலங்கை இராணுவம் எந்தவிதமான ஒரு யுத்தக் குற்றத்திலும் ஈடுபடவில்லை. அதனால் நாங்கள் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை என்றார் பொன்சேகா

எனினும், தனிப்பட்ட நபர்கள் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம். இது சம்பந்தமாக கட்டாயம் விசாரணை செய்ய வேண்டும் என ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

  Comments - 0

 • xlntgson Wednesday, 09 June 2010 10:21 PM

  கோட்டாபய தான் உணர்ச்சி மீறி பேசுகின்றார் என்றால் இவரும் விட்டேனா பார் என்று நிற்கின்றார் கைதி போலவா பேசுகிறார்? காழ்ப்புணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் ஒரு பாராளுமன்ற ஜனநாயகவாதி போல் பேசவேண்டும் இலங்கைக்கு எதிராக செயல்படுகின்றவர்கள் நிழலை நிஜமாக்குவார்கள் அல்லாமல் இதில் கண்கண்ட சாட்சிகள் உயிரோடு இருக்கின்றார்களா எவரும் சுயநலம் கருதாது உண்மை விளம்புவார்களா என்பது சந்தகமே, பழிவாங்கும் உணர்ச்சியில் கொதிக்கிறவர்களுக்கு கண் மறைக்கும் மாலைக்கண்காரனுடன் நியாயம் பேச இயலாது, இரத்த அழுத்த நோய் வருத்தும்!

  Reply : 0       0

  xlntgson Friday, 11 June 2010 10:04 PM

  காழ்ப்பு உணர்சிகளுக்கு இடம்கொடுக்காமல் செயல்பட வேண்டும். கண் கண்டசாட்சிகள் இல்லாமல் எந்த ஒரு வழக்கையும் வெல்ல இயலாது, நான் கண்டேன் என்று கூறுபவர்கள் பொய் சாட்சி கூறுபவர்களாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. விடியோ சாட்சி ஏற்புடையதா என்பதும் சந்தேகமே, நிற்க, இலங்கையின் விசாரணையை ஏற்றுக்கொள்ள ஐ. நா. தயாராக இருப்பது போல் தெரிகிறது. குற்றம் குறை இருந்தால் அதை ஐ. நா. விசாரணையோடு ஒப்பீடு செய்யவும். வெளியுறவு அமைச்சர் ஒத்துக்கொண்டு இருக்கிறாரே! இலங்கை விசாரணையை முற்றாக நிராகரிக்கவில்லை குறை நிரப்பு மட்டுமே!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--