2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

கத்திரிக்கோலால் குத்தி இளைஞன் கொலை

Editorial   / 2020 ஜனவரி 03 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பட்டபொல- பொரலுவாதொட்ட பிரதேசத்தில் உள்ள சலூன் ஒன்றில் வைத்து, இளைஞரொருவர் கத்திரிகோலால் குத்திக்  கொலை செய்யப்பட்டுள்ளார்.

25 வயது இளைஞர் ஒருவர் முடி வெட்டுவதற்காக சலூனுக்கு வந்த போது, அங்கு மதுபோதையில் வந்த நபரொருவர் குறித்த இளைஞனை கத்திரிக்கோலால் குத்தியுள்ளார்.

இதன்போது காயமடைந்த இளைஞர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன், கொலையாளி அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் பிரதேசத்திலிருந்து தப்பியோடியுள்ளதாகவும் பட்டபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--