2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

சஷியின் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு மாயம்

Menaka Mookandi   / 2017 மே 25 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மனைவியான சஷி வீரவன்சவினால், நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை ஆகிய இரண்டும் காணாமல் போயுள்ளன.

இது தொடர்பில், இன்றைய தினம், நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுக்காக, பிறந்த திகதியை மாற்றினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில், நீதிமன்றத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வழக்குக்காகவே, அவ்விரண்டு ஆவணங்களும், நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையிலேயே, இவ்விரண்டு ஆவணங்களும் காணாமல் போயுள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .