2020 நவம்பர் 28, சனிக்கிழமை

‘சீனாவுடனான பேச்சுவார்த்தை விற்பனைக்கு எதிரானது’

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 20 , பி.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெலும் பண்டார  

கடந்தகால ஆட்சி மாற்றம் தொடர்பில், சீனாவுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அது, நாட்டின் தேசிய சொத்துகளை விற்பனை செய்வதற்கு எதிரான பேச்சுவார்த்தையாகவே இருந்தது என்றும், ஒன்றிணைந்த எதிரணியினர், நேற்றுத் தெரிவித்தனர்.   ஒன்றிணைந்த எதிரணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்று, நேற்று (20), கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறியதாவது,  

“நாட்டுக்குள் முதலீடுகள் வருவதை நான் வரவேற்கின்றேன். தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதற்கும் முதலீடுகளை ​நாட்டுக்குள் கொண்டுவருவதற்கும், வித்தியாசமுண்டு.  

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், சீனா தொடர்பான கொள்கை மாறுபடாத ஒன்றாகக் காணப்பட்டது. 15,000 ஏக்கர் நிலத்தை சீனாவுக்கு கொடுக்கவிருந்த நடவடிக்கை, பொதுமக்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியது.  

இதன் காரணமாக, ஹம்பாந்தோட்டையிலுள்ள 750 ஏக்கர் நிலப்பரப்பை மாத்திரமே, முதலீட்டுக்காக கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில், அரசாங்கம் உறுதியாக இருத்தல் வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .