2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

ஜே.வி.பி கூட்டத்தில் துப்பாக்கி பிரயோகம்; குற்றவாளிக்கு மரண தண்டனை

Editorial   / 2019 நவம்பர் 07 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு இருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் ஜூலம்பிட்டிய அமரே என்றழைக்கப்படும் கீகன கமகே அமரசிறி என்பவருக்கு தங்காலை மேல் நீதிமன்றம் இன்று (07) மரண தண்டனை விதித்துள்ளது.

தங்காலை மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ்.சபுவித, மரண தண்டனை தீர்ப்பினை பிறப்பித்தார்.

2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி கட்டுவன பகுதியில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டத்தின் போது இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவத்தில் கட்டுவன பகுதியை சேர்ந்த பெண் மற்றும் இளைஞர் ஆகியோர் உயிரிழந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .