2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

பயங்கரவாதத்தை ஒழிக்க புதிய சட்டம்

Editorial   / 2018 செப்டெம்பர் 12 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது நடைமுறையிலுள் பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தை இரத்துச் செய்து, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான புதிய சட்டமொன்றைக் கொண்டுவருவதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பான சட்டமூலமொன்றை, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவால், நேற்று (11) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதோடு, அதில் சில திருத்தங்களை மேற்கொண்டு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும், அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

இந்தப் புதிய சட்டமூலத்தில், அத்தியாவசியமான காரணிகள் சில உள்ளடங்கவில்லை என்று, அமைச்சர்களான விஜேதாச ராஜபக்ஷ மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோரால், அமைச்சரவைக் கூட்டத்தின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.         


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X