2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

மழை தொடர்ந்து பெய்வதற்கான வாய்ப்பு- வளிமண்டலவியல் திணைக்களம்

Super User   / 2010 மே 23 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


நாட்டில் தற்போது பெய்துவரும் கடும் மழை, இன்று மாலை மற்றும் நாளைய தினத்திலும் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.  

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பருவப்பெயர்ச்சி மழை பெய்யாதிருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டுவருவதாக குறித்த திணைக்களம் நேற்று அறிவித்திருந்த நிலையிலேயே மழை தொடரும் என்ற இத்தகவலை வெளியிட்டது.

இந்நிலையில், மேல், சப்பிரகமுவா மற்றும் தென் மாகாணங்களில் அடுத்துவரும் 36மணித்தியாலங்களில் கடும் மழை பெய்யும் என்று தெரிவித்த வளிமண்டலவியல் திணைக்களம், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அறிவித்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .