2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

மீட்டியாகொடயில் சூடு: ஒருவர் பலி

Thipaan   / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி மாவட்டத்தின் மீட்டியாகொட சந்திப் பகுதியிலிருந்த பழக்கடையொன்றில் இன்று திங்கட்கிழமை (12) காலை 10.20க்கு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மீட்டியாகொடவை வசிப்பிடமாகக் கொண்ட ஹிக்கடுவையைச் சேர்ந்த 45 வயதுடைய பள்ளியகுறுகே விபுல் பிரியந்த என்பவரே இந்தத் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளதாக, மீட்டியாகொட பொலிஸார் தெரிவித்தனர்.

பழக்கடையின் உரிமையாளரான குறித்த நபரைக் காயங்களுக்குள்ளான நிலையில் படபொல வைத்தியசாலையில் அனுமதித்த போதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும், இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மீட்டியாகொட பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .