2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

ரவி கருணாநாயக்க சார்பில் மனு தாக்கல்

Editorial   / 2020 மார்ச் 10 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான பிடியாணை உத்தரவை நீக்குமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரவி கருணாநாயக்கவின் சட்டத்தரணிகள்  குறித்த ரீட் மனுவை இன்று (10) தாக்கல் செய்துள்ளனர்.

முன்னதாக, மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் பிடியாணை பெற்றவர்களை கைதுசெய்யுமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ் மாஅதிபருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

இதனையடுத்து, ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக பிடியாணை உத்தரவை கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க  பிறப்பித்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .