2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

'லங்கா' பத்திரிகையின் ஊடகவியலாளர் மீது குண்டர்கள் தாக்குதல்

Super User   / 2010 மே 30 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

'லங்கா' பத்திரிகையின் ஊடகவியலாளர்  அரசியல்வாதி ஒருவருக்கு ஆதரவான குண்டர்கள் சிலரால் நேற்று மாலை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

மொனராகலையில் கலை நிகழ்வொன்றிற்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தபோதே குறித்த ஊடகவியலாளர்  தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக 'லங்கா' பத்திரிகையின் ஆசிரியர் சந்தான சிறிமல்வத்த தெரிவித்தார்.

குறித்த ஊடகவியலாளர் தாக்கப்பட்ட பின்னர் அவரது கையடக்கத் தொலைபேசி  எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், தாக்குதல் நடத்திய குண்டர்களின் வாகனத்தை தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளர் படம் எடுத்ததாகவும் 'லங்கா' பத்திரிகையின் ஆசிரியர் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--