2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

'வவுனியாவை தலைநகரமாக்கவும்'

Editorial   / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தம் காரணமாக பாரிய அழிவுக்கு முகங்கொடுத்த வவுனியா நகரத்தை இலங்கையில் தலைநகரமாக்கி  அபிவிருத்திகளை முன்னெடுப்பதன் ஊடாக, இனங்களுக்கு இடையில் நல்லிணகத்ததை ஏற்படுத்தவும், தேசிய பிரச்சினைக்கு தீர்வுப்பெற்றுக்கொள்ளவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சோசலிச கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க தயாராகியுள்ள அஜந்தா பெரேரா, கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இதனை கூறியுள்ளார்.

நாட்டின் தலைநகரமாக வவுனியாவை மாற்றுவதன் ஊடாக பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தம் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள தமிழ் மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது மிகவும் அவசியமான விடயம் என்று கூறிய அஜந்தா பெரேரா, தமிழ் மக்களுக்கு அபிவிருத்தி திட்டங்கள் அதிகளவில் வழங்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, தமிழ் மக்களின் நலன்களுக்காக செயற்படுவதற்கு தான் அதிகளவு விருப்பம் கொண்டுள்ளதாகவும் அஜந்தா பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .