2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

வவுனியாவில் இன்று பல நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் நடிகர் விவேக் ஓப்ராய்

Super User   / 2010 ஜூன் 07 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

EXCLUSIVE வவுனியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இந்திய நடிகர் விவேக் ஓப்ராய்க்கும் அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸுக்கும் இடையில் தற்போது கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் சற்றுமுன் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

இவர்களுடன் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தனவும் கலந்துகொண்டுள்ளார் என்றும் எமது செய்தியாளர் கூறினார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் நிலைமைகளை நேரில் கண்டறிவதற்காக இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுபற்றிய மேலதிக தகவல்களை தருவதற்காக தமிழ்மிரர் இணையதளம் காத்திருக்கின்றது.  Comments - 0

  • mohamed suhail Tuesday, 08 June 2010 04:44 PM

    காத்திருப்புக்கு இன்னும் பலன் கிடைக்கவில்லையா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .