2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

18ஆம் திகதி கூட்டமைப்பு வேட்பு மனுத் தாக்கல்?

Editorial   / 2020 மார்ச் 15 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

நாடாளுமன்றத் தேர்தலுக்க்கான வேட்பு மனுவை, வடக்கு - கிழக்கு முழுவதும், எதிர்வரும் 18 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய தமிழ்க் கட்சிகள் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேட்பு மனுக்களை, இம்மாதம் 12ஆம் திகதி முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யுமாறு, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்ததன் அடிப்டையில், நாடாளாவிய ரீதியில் சில கட்சிகளும் சுயேட்சைக்கழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றன.

இந்நிலையில், தெற்கைப் பிரதிநிதுத்தவப்படுத்தும் பிரதான கட்சிகளோ வட-கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சிகளோ இதுவரைக்கும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவில்லை.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது, வடக்கு – கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளோ வேட்பாளர்களை இறுதிசெய்வதில் இழுபறிநிலையிலேயே உள்ளது.

குறிப்பாக, வேட்பாளர்களை இறுதிசெய்வதில் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகளாலே, வேட்புமனுத் தாக்கல் செய்வதிலும் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன.

இந்த நிலையில், மார்ச் 18ஆம் திகதியன்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோன்று, முன்னாள் முதலமைச்சர் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் அன்றையதினமே வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளதாக தெரியவருகின்றது.

மேலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் 18ஆம் திகதியில், வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதே நேரத்தில், மேலும் சில கட்சிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் திகதி தொடர்பில் இதுவரை முடிவுகள் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .