2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

உடப்புசலாவயில் பாரிய தீ: 20 லயன் வீடுகள் சேதம்

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 14 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உடப்புசலாவ- டெல்மார், றொக்லண்ட் டிவிஷனில் மின்சார ஒழுக்கு காரணமாக 20 லயன் வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. இன்று சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் இந்த பாரிய அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இந்த தீ விபத்தில் எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை.

எரிந்து நாசமாகிய லயன் வீடுகளில் வசித்த சுமார் 70பேர் வீடுகளை இழந்து நிர்க்கதியாகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக அருகிலுள்ள சூரியகாபத்தன பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான ஒழுங்குகளை நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் கவனித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--