2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

அனுமதியின்றி கட்டிடங்கள் அமைக்கத் தடை

Suganthini Ratnam   / 2010 ஜூலை 15 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி கரைச்சிப் பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட திருமுறிகண்டியிலிருந்து ஆனையிறவு வரையான பகுதிகளில் கரைச்சிப் பிரதேசசபையின் அனுமதியின்றி எந்தவிதமான கட்டிட நிர்மாண நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பகுதியிலுள்ள ஏ௯ வீதி எதிர்வரும் காலத்தில் வீதியின் மத்தியிலிருந்து 24 மீற்றர் தூரம் வரை அகலமாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கிளிநொச்சி கரைச்சிப் பிரதேசத்துக்குட்பட்ட பகுதி வீதியோரங்களிலுள்ள  மரங்களில் விளம்பரப் பதாகைகளை வைப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரைச்சிக் பிரதேசசபை செயலாளர் பொன்.நித்தியானந்தன் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

வீதியோரங்களிலுள்ள மரங்களில் விளம்பரங்களை வைத்து ஆணி அடிப்பதன் மூலம் மரங்கள் அழிவடையும் நிலை தோன்றியுள்ளதால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--