2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

ஐ.தே.க மீது ஜே.வி.பி. விசனம்

Super User   / 2010 ஓகஸ்ட் 26 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

(கெலும் பண்டார)

அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்து அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவதற்காக ஐ.தே.க.வை ஜே.வி.பி. விமர்சித்துள்ளது.

'அரசாங்கத்தின் முயற்சி குறித்து நாம் பொதுமக்கள் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளோம். பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக நாம் கருத்தரங்குகளை நடத்தியுள்ளோம். ஆனால் இது தொடர்பான பொதுமக்களின் கவனத்தை ஐ.தே.கவுடன் பேச்சு நடத்துவதன் மூலம் அரசாங்கம் திசை திருப்புகிறது. எனவே, உத்தேச அரசியலமைப்பு திருத்தத்தின் விளைவுகளுக்கு ஐ.தே.க.வும் பொறுப்பேற்க வேண்டுமென நாம் கருதுகிறோம்' என இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஜே.வி.பி. பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா கூறினார்.

அடுத்து நாடாளுமன்றம் கூடவுள்ள வாரத்தில் அரசியலமைப்பு திருத்த யோசனைகளை முன்வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை அரசாங்கம் மேலும் பலப்படுத்திக் கொள்ளும் எனவும் ஜே.வி.பி. கூறியுள்ளது.

(படப்பிடிப்பு :நிசால் பதுகே)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--