2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

இலங்கை - துருக்கி ஜனாதிபதிகள் சந்திப்பு

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 23 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.நா. பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, துருக்கி ஜனாதிபதி அப்துல்லா கல்ப்பை சந்தித்ததாக நியூயோர்க்கிலுள்ள ஜனாதிபதி தகவல் பிரிவு தெரிவித்தது.

இந்நிலையில், பயங்கரவாதத்துக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள துருக்கி ஜனாதிபதி, அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பிரிவினைவாத பிரச்சினை குறித்தும் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டன.

அத்துடன் கடந்த 2008ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ துருக்கிக்கான விஜயத்தினை மேற்கொண்ட போது இரு நாடுகளுக்கு இடையிலும் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் தேவைப்பாடு குறித்தும் துருக்கிய ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியதாக குறிப்பிடப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--