2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

மின்சார உற்பத்திக்காக மரங்களை வளர்க்க அரசாங்கம் நடவடிக்கை

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 09 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(சந்துன் ஏ.ஜயசேகர)

மின்சாரத்தை உற்பத்தியாக்குவதற்கு தேவையான டென்ரோ மற்றும் கிளிசீரியா போன்ற மரங்களை பயன்படுத்தும் நோக்கில் பெருந்தோட்டங்களை உண்டாக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இதன் முதற்படியாக இலங்கையரும் சீனர் ஒருவரும் இணைந்து உயிர்த்திணிவைப் பயன்படுத்தி 10 மெகா வாட்ஸ் மின் உற்பத்தி செய்யும் 10 மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கவுள்ளனர்.

இந்த கூட்டு முயற்சி தனி ஒரு சீனர் இலங்கையில் மேற்கொள்ளும் அதிகூடிய முதலீடு ஆகும். இது தொடர்பான ஒப்பந்தம் இன்று கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.

இதுபற்றிக் கருத்து தெரிவித்த மின்சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, "பெருந்தோட்டங்கள் ஒரே வகை மரங்களைக் கொண்டிருப்பதை தவிர்க்கும்படி" கேட்டுக்கொண்டார்.

அத்துடன், "மனித நாகரிகம் சுவட்டு எரிபொருள் சகாப்த முடிவை எட்டி வருகின்றது. அத்துடன் சுவட்டு எரிபொருள் பாவனை உலகின் பல பிரச்சினைகளின் பின்னணியாக உள்ளது. சூரிய சக்தியைப் பயன்படுத்துவதே மிகவும் வினைத்திறன் மிக்க வழியாகும்.

ஆனால், சூரிய சக்தியை மின்சக்தியாக மாற்றும் போட்டோவொலடைக் (Photovoltaic) என்ற தொழில்நுட்பம் அதிக செலவானதாக உள்ளது. ஆனால் பலர் சூரிய ஒளித்தொகுப்பை நிகழ்த்தும் தாவரங்களை மறந்துவிடுகின்றனர்" என அமைச்சர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--