2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

பி.எச்.டி. பட்டதாரிகளுக்கு தட்டுப்பாடு

Super User   / 2010 டிசெம்பர் 21 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பிக்கும் அதிகாரிகளில் 60 சதவீதமானோர் பி.எச்.டி. (கலாநிதி) தகைமையை கொண்டிருக்கவில்லை என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பட்டப்பின்படிப்பு கல்விநிறுவகத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

வடக்கு கிழக்கிலுள்ள பல்கலைக்கழகங்களிலும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களிலும் இந்நிலைமை மோசமாக இருப்பதாக அவர் தெரிவித்தள்ளார்.

முகாமைத்துவம் தகவல்தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பட்டப்பின்படிப்பு தகைமை பெற்ற பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

கலை, மனிதவியல், முகாமைத்துவம் போன்ற துறைகளைச் சார்ந்த பல்கலைக்கழக ஆசிரியர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கற்பதற்கு குறைந்த நிதிவளத்தையே கொண்டிருக்கின்றனர். எனவே ஒருவருட கால ஆய்வுகளை மாத்திரம் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் மேற்கொள்வோருக்கு உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் பி.எச்.டி பட்டத்தை வழங்கக் கோருவது சிறந்தது எனவும் அவர் தெரிவித்தார்.

இத்திட்டம் அடுத்த வருடம் முதல் அமுல்படுத்தப்படும் என் கூறிய அமைச்சர் இதை வெற்றிகரமாக்குவதற்கு பல்கலைக்கழகங்களின் சிரேஷ்ட அதிகாரிகளின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
 


  Comments - 0

 • xlntgson Friday, 24 December 2010 09:33 PM

  பீ எச் டீ என்பது ஆராய்ச்சித் துறைப்பட்டம். மேர்வின் சில்வா கௌரவ டாக்டர். அது மாதிரியான கௌரவப் பட்டம் நூற்றுக்கணக்கில் ஜவஹர்லால் நேருவுக்கு இருந்ததாம்! ஆனால் தன்னை யாரும் டாக்டர் என்று அழைக்க வேண்டாம் என்று கூறிவிட்டார். அவரை பண்டிதர் என்று மட்டுமே அழைக்க அனுமதித்தார் அது இந்தியில் மிக சாதாரணப் பட்டம், ஆசிரியர் என்பது போன்றது. அது எவ்வளவு பெருந்தன்மை!
  பதவிக்கும் பட்டத்துக்கும் அலையும் மனிதர்கள் ஏன் என்னுடைய பெயரை இப்படி போட்டாய் அதனால் வரமாட்டேன் என்று கடைசி நேரத்தில் வரமறுக்கும் பொய் டாக்டர்கள்!

  Reply : 0       0

  Thilak Wednesday, 22 December 2010 08:52 PM

  மேர்வின் சில்வாவும் டாக்டர்தானே?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--