2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

தென்கிழக்கு கரையோர பாதுகாப்பை பலப்படுத்துகிறது இந்தியா

Super User   / 2011 ஜனவரி 14 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவின் தென் கிழக்கு கரையோரத்தில் பாதுகாப்பை பலப்படுத்தவுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. இந்திய மீனவர்கள் மீதான தாக்குதலின் பின்னணியில் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய கடற்படையின்  கிழக்குப் பிராந்திய பிரிவின் பிரதம படை அதிகாரி எஸ்.வி. தாக்கரே செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா கடும் ஆட்சேபத்தை தெரிவித்து ஒருநாளின் பின்னர் இந்திய கடற்படை அதிகாரிகள் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில்  இந்திய மீனவர் ஒருவர் பலியானார். இலங்கைக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இத்தாக்குதல் தொடர்பாக மத்திய அரசாங்கத்திற்கு அறிவித்திருப்பதாக தாக்கரே கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--