2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

ஐரோப்பிய ஒன்றிய பயங்கரவாத பட்டியலில் மீண்டும் எல்.ரி.ரி.ஈ.

Super User   / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐரோப்பிய ஒன்றியம் தனது பயங்கரவாத பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் சேர்த்துள்ளது. பயங்கரவாத அமைப்புகளின் பட்டியல் பரந்தளவில் மீளாய்வு செய்யப்பட்டதையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயர் இப்பட்டியலில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட நபர்களுக்கும் அமைப்புகளுக்கும் எதிராக பயங்கரவாதத்தை எதிர்த்து போராடும் நோக்குடன்  ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளில் செயற்படுவதை தடைசெய்தல், சொத்துக்களை முடக்குதல் போன்றவற்றை இலக்காக்க கொண்டு 2001 ஆம்ஆண்டு டிசெம்பர் 27 ஆம் திகதிய 2580/2001 ஆம் இலக்க ஒழுங்குபடுத்தல் சபையின் விதிகளின் ஐரோப்பிய ஒன்றிய பயங்கரவாத பட்டியல் தயாரிக்கப்பட்டது.

புதிய பட்டியல் குறித்த அறிவிப்பு ஜனவரி 31 ஆம் திகதி மெற்கொள்ளப்பட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட 26 அமைப்புகள் இடம்பெற்றுள்ளன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .