2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

'ஆகக்குறைந்த கட்டணத்தை அதிகரிக்க முடியாது'

Super User   / 2011 ஜூன் 10 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சந்துன் ஏ ஜயசேகர)

பஸ் கட்டண மீளாய்வு ஜூலை முதலாம் திகதி அமுலுக்கு வரவுள்ளது. எனினும் தனியார் பஸ் இயக்குநர்கள் கோருவதைப்போல் ஆகக்குறைந்த கட்டணத்தை 6 ரூபாவிலிருந்து 10 ரூபாவாக அதிகரிப்பது சாத்தியமில்லை என தனியார் போக்குவரத்துத்துறை அமைச்சர் சி.பி. ரட்னாயக்க தெரிவித்துள்ளார்.

பஸ் கட்டண மீளாய்வு தொடர்பாக அமைச்சர் ரட்ணாயக்க தலைமையில் நேற்று வியாழக்கிழமை கலந்துரையாடலெனர்று நடைபெற்றது. தனியார் பஸ் இயக்குநர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், போக்குவரத்து அமைச்சு மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவற்றின் அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.
இந்த கலந்துரையாடலில் முடிவு எதுவும் எட்டப்படாதநிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

பெரும் எண்ணிக்கையான தனியார் பஸ்கள் மாகாண சபைகளின் கீழ் வருவதால் தான் தனியாக தீர்மானம் மேற்கொள்ள முடியாது என அமைச்சர் சி.பி. ரட்னாயக்க கூறியுள்ளார்.

'சுமார் 3000 பஸ்கள் மாத்திரமே எனதுபொறுப்பின் கீழ் வருகின்றன. மாகாண போக்குவரத்து அதிகார சபைகள் 17,000 பஸ்களை கையாளுகின்றன. எனவே பஸ் கட்டண மீளாய்வு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரதும் இணக்கத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும்' என அவர் டெய்லி மிரருக்கு தெரிவித்தார்.

இதேவேளை, பஸ் கட்டணங்கள் 15 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் ஆகக் குறைந்த கட்டணம் 2 ரூபாவால் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும்  தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X