2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

ஹெட்ஜிங் சூதாட்டத்திற்கு பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை

Suganthini Ratnam   / 2011 ஜூலை 15 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வங்கிகளுக்கு பல மில்லியன் டொலர்களை இலங்கை செலுத்த வேண்டிய நிலைமைக்கு காரணமாக பெற்றோல் விலையேற்றத்தை எதிர்பார்த்து வங்கிகளுடன் செய்யப்பட்ட ஹெட்ஜிங்  என்னும் சூதாட்டத்திற்கு பொறுப்பான, நாசகாரர்கள் அச்சங்கத்தில் இருந்தால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

குற்றமிழைத்த அதிகாரிகளை இந்த பணத்தை செலுத்த வைக்கவேண்டும். தேவையெனில் இதற்காக அவர்களின் சொத்துக்களை அரசாங்கம் பறிமுதல் செய்ய வேண்டும். இவர்களிடம் சொத்துகள் இல்லையெனில் இந்த சூதாட்டத்திற்காக அவர்களை மறியலில் வைக்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.

அரசாங்கம் இந்தப் பணத்தை பொதுநிதியிலிருந்து செலுத்துமாயின் நாடு தீவிரமான பொருளாதார பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டுமெனவும் அமைச்சர் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டார்.


  Comments - 0

 • sakeena, Nelugollakada. Friday, 15 July 2011 08:00 PM

  இது அரசியல், ஒவ்வொருவரும் இப்படி இருந்தால் நல்லது...

  Reply : 0       0

  xlntgson Friday, 15 July 2011 09:40 PM

  கையில் இருக்கும் 1 புறாவை விட மரத்தில்- கூட்டில் இருக்கும் பல புறாக்கள் பெரிதென்னும் விதமாகவே அரச செயற்பாடுகள் அமைகின்றன.
  இவர்கள் நடந்த ஒன்றுக்கே இவ்வளவு பெரிய தொகை வட்டியும் முதலுமாக (!) கட்ட வேண்டியதென்றால் மற்றவை பற்றி கூறத் தேவையில்லை!
  காப்புறுதி செய்யாவிட்டால் வாகனங்கள் ஓடுமா,
  ஓட்ட விடுவார்களா, வழக்கு வம்பு என்றில்லாமல்?
  வங்கி + காப்புறுதி மக்கள் மனதைப் பிடித்து ஆட்டும் பேய்கள்! அநேகர் சந்தோஷம் இல்லாமல் இருக்கிறார்கள். சகல வசதி இருந்தும் ஏன் என்றால் வட்டி பிரிமியம் கட்ட திகதி நெருங்குகிறதென்று!

  Reply : 0       0

  sanoos Friday, 15 July 2011 10:26 PM

  நல்ல அறிவுரை கேட்பதற்கு யாரும் இல்லை.

  Reply : 0       0

  Nesan Friday, 15 July 2011 10:37 PM

  அந்த நாசகாரர்களை பதவியில் அமர்த்தியவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

  Reply : 0       0

  aJ Friday, 15 July 2011 11:54 PM

  சபாஷ் விமல்

  Reply : 0       0

  Niyas Lanka Saturday, 16 July 2011 06:34 PM

  இந்த கோஷம் உண்மையிலேயே நாட்டு மக்களின்மேல் உள்ள அக்கரறயினாலேயா அல்லது நம்மை பழைய சகாக்கள் அதாங்க நம்ம ஜேவிபி சகோதரங்க முந்திடுவாங்க எங்கிற பயத்தினாலோ என்னவோ?

  Reply : 0       0

  Mattran Saturday, 16 July 2011 09:05 PM

  ஆஹ்ஹ நீங்கள் இருக்கிறீர்களா
  கன நாள் கடந்து உங்கள் சத்தம் வருகிறது ஆனால்.............
  இதுவும் நீங்கள் இருக்கும் அதே அரசாங்க நபர்கள் சம்பந்தப்பட்டவை. அது உங்கள் கண் மறைவில் நடந்தது எப்படி??

  Reply : 0       0

  vaasahan Sunday, 17 July 2011 05:06 AM

  அமைச்சர் அவர்கள் மத்திய வங்கி ஆளுநரின் கருத்தை நேற்று கேட்டிருக்க வேண்டும். இதெல்லாம் சஹஜமப்பா என்ற தொனியில் அந்த ஆள் போட்டிருக்கார் ஒரு போடு.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--