2021 மே 06, வியாழக்கிழமை

'பிரிட்டனிலிருந்து திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள் சித்திரவதைக்கு ஆளாக்கப்படும் சாத்தியம்'

Super User   / 2011 செப்டெம்பர் 29 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரிட்டனில் உள்ள தமிழர்கள் சிலரை மீண்டும் இலங்கைக்கு அனுப்பிவைக்கும் பட்சத்தில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்படும் சாத்தியம் உள்ளதால் பிரித்தானிய அரசாங்கம் இத்திட்டத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என பிரித்தானிய மருத்துவ அறக்கட்டளையகம் இன்று தெரிவித்துள்ளது.

புகலிட கோரிக்கை மறுக்கப்பட்ட 50 பேரை வாடகை விமானம் மூலம் பிரித்தானிய எல்லை முகவரகம் பலவந்தமாக திருப்பி அனுப்பியுள்ளது.

இலங்கையில் 2009 மே மாதம் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட சிலர் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டமைக்கு மருத்துவ சான்றுகள் உள்ளன என அறக்கட்டளையகம் குறிப்பிட்டது.

இதேவேளை, தமிழீழ விடுதலை புலிகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் மோசமாக நடத்தப்படும் ஆபத்து உள்ளது என பல தொண்டர் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

தமிழீழ விடுதலை புலிகளுடன் தொடர்புடையவர்கள் என தடுத்து வைக்கப்பட்டவர்கள் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என மனித உரிமை கண்கானிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் பிராட் அடம்ஸ் கூறினார்.

அவுஸ்ரேலியாவிலிருந்து வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டவர்கள் இலங்கைக்கு மீண்ட போது சித்தரவதைக்கு உட்பட்டதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்தது.


  Comments - 0

 • asker Sunday, 02 October 2011 05:20 PM

  சித்திரவதை என்று போட்டால் தான் visa கிடைக்கும்.

  Reply : 0       0

  neethan Thursday, 29 September 2011 05:47 PM

  குற்றம் செய்தோர் யாராகிலும் தண்டிக்கபடவேனும். ஆனால் சித்திரவதைக்கு ஆளாவதை அனுமதிக்க கூடாது.

  Reply : 0       0

  UMMPA Friday, 30 September 2011 01:36 AM

  இதுக்குதான் எந்த ஒரு நாட்டுகாரனையும் நம்பிக்கொண்டு இருந்துதான் நாம் எல்லாத்தையும் இழந்து நாடு வீதிக்கு வந்துவிட்டோம். எனவே பிறந்த நாட்டில் இருந்து மூளையைக்கொண்டு முன்னேறவும்!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .