2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க ஈரான் உதவும்: புதிய தூதுவர்

Super User   / 2011 நவம்பர் 16 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

சுமார் 2 பில்லியன் ரூபா பெறுமதியான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தினை இலங்கையில் அமைக்கும் திட்டத்திற்கு ஈரானிய அரசாங்கம் உதவும் என இலங்கைக்கான ஈரான் தூதுவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி நபி முகம்மட் ஹசன் பூர் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஈரான் கலாசார நிலையத்தில் இலங்கைக்கான புதிய ஈரான் தூதுவரை அறிமுக வரவேற்பு நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சுற்றுலா, விவசாயம், பொது உறவு, கலாசாரம் போன்ற பல துறைகளில் இலங்கை உடனான தொடர்பினை ஈரானிய அரசாங்கம் அதிகரிக்கும் என அவர் கூறினார்.

இலங்கையில் நிலையான அபிவிருத்தியினை மேற்கொள்வதற்கான சந்தப்பத்தை சரியான முறையில் பயன்படுத்துவோம் என கலாநிதி நபி முகம்மட் ஹசன் பூர் தெரிவித்தார்.

இதேவேளை, இஸ்லாம் மற்றும் ஏனைய மதங்களுக்கிடையிலான சிறந்த புரிந்துணர்வை கட்டியெழுப்பவும் ஈரானிய அரசு உதவும் என புதிய ஈரானிய தூதுவர் குறிப்பிட்டார்.  

இதற்கு மேலதிகமாக இலங்கையிலுள்ள அனைத்து சமூகத்தினருக்கும் ஈரானிய தேசிய மொழியான பாரசீகத்தை கற்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வீடமைப்பு திட்டம், 1,000 கிராமங்களுக்கு தேவையான மின்சார வசதி போன்ற பல பாரிய உதவிகளை ஈரானிய அரசாங்கம் இலங்கையில் முன்னர் மேற்கொண்டுள்ளதாக தூதுவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஈரான் ஆன்மீக தலைவரின் செயலக தெற்காசிய பிராந்திய பிரதிநிதியான ஆயதுல்லா செய்த் சஹ்ருகி மற்றும் கொழும்பிலுள்ள ஈரான் தூதுவராலய கலாசார பிரிவின் கொன்சியூலர் மெஹ்தி ஜீ.ருக்னி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .