2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

இலங்கை தமிழர் விவகாரத்தில் மாற்றமில்லை: மன்மோகன்

Kanagaraj   / 2013 ஜூலை 25 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசாங்கம் எடுத்துள்ள நிலைப்பாட்டில் எவ்விதமான மாற்றமும் இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதிய பதில் கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாகவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசின் 13 ஆவது சட்ட திருத்தம் பற்றியும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.இலங்கைத் தமிழர்கள் சுய கௌரவத்துடன் வாழ அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்களுக்கு சமஉரிமை, அதிகாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மன்மோகன் உறுதியளித்துள்ளார்.

  Comments - 0

  • AMBI. Thursday, 25 July 2013 09:47 AM

    சபாஸ்... தலைப்பாகைக்கும், சால்வைத் துண்டுக்கும் சரியான போட்டி. இதில் வெல்லப்போவது யார்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--