2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

இலங்கையில் வாழும் தமிழர்களை பாதுகாக்கவேண்டும்: பா.ஜ.க

Kanagaraj   / 2013 ஜூலை 28 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் மனித உரிமைகள் பாதுக்காக்கப்பட வேண்டும். எல்லா குடிமக்களுக்கும் சமமான உரிமை வழங்கப்பட வேண்டும். எந்த பிரிவினரும் வஞ்சிக்கப்படக் கூடாது என்பதுடன் தமிழர்களை பாதுகாக்கவேண்டும் என்று பா.ஜ.கவின்  பொதுச்செயலாளர் அனந்த் குமார் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் அமெரிக்காவுக்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர்  நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் மனித உரிமைகள் பாதுக்காக்கப்பட வேண்டும். இலங்கையின் சமூக அரசியல்-பொருளாதார அமைப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை தரும் புதிய வழிமுறையை இலங்கை அரசு ஏற்படுத்தி கொடுக்கவேண்டும்.

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கான பாதுகாப்பை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்பதுடன் தமிழர்களுக்கான பாதுகாப்பை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .