2019 டிசெம்பர் 16, திங்கட்கிழமை

அமைச்சரவை கூடும் நேரத்தில் மாற்றம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் காலை 7.30  மணிக்கு கூடிய, அமைச்சரவை சந்திப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, அமைச்சரவை சந்திப்பை காலை 8.30 மணிக்கு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காலை 7.30 மணிக்கு நடத்தப்படும் அமைச்சரவை கூட்டங்களுக்கு, சில அமைச்சர்கள் தாமதமாக வருவதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை செவ்வாய்க்கிழமைகளில் காலை 9.30 மணிக்கு இடம்பெற்று வந்த அமைச்சரவை கூட்டத்தை, காலை 7.30 மணிக்கு நடத்த ஜனாதிபதி மைத்தி்ரிபால சிறிசேன கடந்த சில தினங்களுக்கு முன்னரே தீர்மானித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் இந்த நேரமாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .