2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அரசமைப்பு சபை இன்று கூடுகிறது

Editorial   / 2020 ஓகஸ்ட் 03 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசமைப்பு பேரவையின் மற்றுமொரு கூட்டம், அதன் தலைவரும் எட்டாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகருமான கரு ஜயசூரிய தலைமையில் இன்று (03) கூடவுள்ளது.  

இதில், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, உள்ளிட்ட அரசமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் கலந்துகொள்ள உள்ளனர். 

“மனித உரிமைகள் ஆணைக்குழு, அரச சேவை ஆணைக்குழு ஆகியவற்றில் காணப்படும் வெற்றிடங்கள், இழப்பீட்டுக்கான அலுவலகத்தில் காணப்படும் வெற்றிடங்கள் ஆகியவற்றை நிரப்புவது தொடர்பில் கலந்துரையாடப்படும்” என, அரசமைப்பு பேரவையின் செயலாளரும், நாடாளுமன்ற செயலாளர் நாயகமுமான தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார். 

 “நிதி ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு, கணக்காய்வு சேவை ஆணைக்குழு, தேசிய கொள்வனவு ஆணைக்குழு ஆகியவற்றால் முன்வைக்கப்பட்டுள்ள காலாண்டு முன்னேற்ற அறிக்கைகள், இதன்போது மதிப்பீடு செய்யப்படவுள்ளன” என்றார்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X