‘ஆட்கடத்தலைக் கட்டுப்படுத்த வலுவான சட்டம் வரும்’

இலங்கைக்குள் இடம்பெறும் ஆட்கடத்தல் மற்றும் எல்லைப் பாதுகாப்பு குறித்து புதிய சட்ட வரைவு தயாரிக்கப்பட்டு வரும் அதேவேளை, சிறப்பு நடைமுறையொன்றையும் அமுல்படுத்தவுள்ளதாக, சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இன்று (14) நடைபெற்ற பயிற்சிப் பட்டறையின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்தத் தெரிவிக்கையில்,

“இலங்கைக்குள் இடம்பெறும் ஆட்கடத்தல் மற்றும் எல்லைப் பாதுகாப்பு குறித்து புதிய சட்ட ஒழுங்குமுறைகள் தயாரிக்கப்பட்டு வருவதுடன், சிறப்பு நடைமுறையும் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக வலுவான சட்டங்கள் தேவைப்படுகிறது. இவ்வாறான வலுவான சட்டங்கள் இல்லாமல் போகும் பட்சத்தில், ஆட்கடத்தல் செயற்பாட்டைக் கட்டுப்படுத்துவது சிக்கலாக அமையும். எனவே, இதன் ஓர் அங்கமாக, ஆட்கடத்தல்காரர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கும் முகமாக, விரிவான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என்றார்.

 


‘ஆட்கடத்தலைக் கட்டுப்படுத்த வலுவான சட்டம் வரும்’

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.