இயற்கை அனர்த்தத்தால் பாதித்தோருக்கு மாடி

சமீபத்திய இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் விருப்பத்துக்கு அமைவாக, உயர்மட்ட மாடிவீட்டுத் திட்டமொன்றை பரீட்சார்த்தமாக மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.   

உயர்மட்ட மாடிவீட்டு முறையொன்றை பரீட்சார்த்தமாக மேற்கொள்வதற்கான ஆலோசனைகளை முன்வைக்குமாறு அதிகாரிகளுக்குப் பணித்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது சுட்டிக்காட்டினார்.   

இயற்கை அனர்த்தங்களுக்கு உள்ளான பிரதேசங்களை மீண்டும் வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்கான விடயங்களைக் கண்டறியும் பொருட்டு நெலுவ பிரதேச செயலக அலுவலகத்தில் நடைபெற்ற காலி மாவட்டக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

வெள்ளம் காரணமாக முழுமையாகச் சேதமடைந்த பாடசாலைகள், அத்தியாவசியப் பெருந்தெருக்களை மீண்டும் நிர்மாணிப்பதில் கேள்விமனுக் கோரலில் தங்கியிருக்காது, திறைசேரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய முடியும்.   

சேதமடைந்த பொலிஸ் நிலையங்களை மீண்டும் நிர்மாணிக்கும்பொழுது, இரண்டு மாடிக் கட்டடங்களாக அவற்றை அமைக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் இதன்போது கூறினார்.  

பாதிக்கப்பட்ட வர்த்தக நிலையங்களை மதிப்பீடு செய்து, அவை தொடர்பான அறிக்கையை கூடிய விரைவில் பெற்றுக்கொண்டு நிவாரண நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்க வேண்டும். பொதுமக்களுக்குப் பணத்தை வழங்கி, அவர்களது வர்த்தக முயற்சிகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற வேண்டும். 

“கால்நடைத்துறையை தமது வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த மக்களுக்கு, மீண்டும் கால்நடைகளை வழங்கி, அவர்களது வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும். விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்குத் தேவையான நிதியை அவர்களுக்கு வழங்கி கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  

“சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட வசதிகளைப் போன்று பாதிக்கப்பட்ட தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும், பாரிய பிரச்சினைகள் உள்ளன. வெள்ளத்தின்போது தொழிற்சாலைகளிலிருந்து காப்புறுதி செய்யப்படாத தயாரிக்கப்பட்ட தேயிலை குறித்த விடயங்களைக் கண்டறிந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.  

இரண்டு வருடகாலப் பகுதிகளில் வைத்தியசாலைகளுக்கு மேலதிகமாக இரண்டு மின்பிறப்பாக்கி இயந்திரங்களை விநியோகிப்பதன் முக்கியத்துவமும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பதற்கும் உயிரிழப்புகளைக் குறைப்பதற்கும் அரச அதிகாரிகளைப் போன்று, எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்படுவதால் மக்களின் வாழ்க்கை நிலையை குறுகிய காலத்துக்குள் மீண்டும் வழமை நிலைக்குக் கொண்டுவர முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.  


இயற்கை அனர்த்தத்தால் பாதித்தோருக்கு மாடி

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.