இராணுவத்தின் 'அமைதி மாளிகை' திறந்து வைப்பு

இராணுவத்தின் புதிதாக வெளிநாட்டு நடவடிக்கைப் பணியகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கொழும்பு - 3இல் அமைந்துள்ள பழைய டச்சு கட்டடத்தில் கடந்த 12ஆம் திகதி இந்த பணியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

'அமைதி மாளிகை' (Sama Medura) என்ற பெயரில், இந்தப் பணியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அமைதிகாப்பு மற்றும் வெளிநாட்டு நடவடிக்கை கடப்பாடுகளை நிறைவேற்றும் செயற்பாடுகளை இந்தப் பணியகம் மேற்கொள்ளவுள்ளது.

பணியகத்தின்  பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மேர்வின் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்காலத்தில், அமைதிகாப்பு படைக்கான படைப்பிரிவுகளை அனுப்புதல், அவர்களுக்கான பயிற்சிகள், செயற்பாடுகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளை இந்த பணியகமே கையாளவுள்ளது.


இராணுவத்தின் 'அமைதி மாளிகை' திறந்து வைப்பு

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.