2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இறுதி கிரியை இன்று

Editorial   / 2020 மே 31 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவரும் அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல், கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்திலிருந்து இன்றைய தினம்(31)   ஹட்டன்- டிக்கோயா வழியாக நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டு மைதானத்துக்கு  எடுத்துச் செல்லப்படவுள்ளது.

இதனையடுத்து, பிற்பகல் 4.00 மணியளவில் இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ளன. இதற்கான சகல ஏற்பாடுகளும்  பூர்த்தியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அன்னாரின் பூதவுடல்  பூரண அரச மரியாதையுடன் தகனம் செய்யப்படவுள்ளது. 

அன்னாரின் பூதவுடலுக்கு மலையக மக்கள் தொடர்ந்தும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X