2019 டிசெம்பர் 16, திங்கட்கிழமை

’உபகுழு கூட்டத்தில் ஒப்பந்த திகதி தீர்மானிக்கப்படும்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் சனிக்கிழமை கூடவுள்ள உபகுழு கூட்டத்தின் போது, ஜனநாயக தேசிய முன்னணிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் திகதி தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அன்றைய தினமே ஜனாதிபதி வேட்பாளர் பெயர் அறிவிப்பும் இடம்பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நேற்றிரவு நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், உபகுழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார.

உபகுழு கூட்டத்தில் ஜனநாயக தேசிய முன்னணி என்ற கூட்டணி தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றும், இந்த கூட்டணியை நாட்டுக்கு அறிவிக்கும் திகதியும் தீர்மானிக்கப்படும் என, மனோ கூறியுள்ளார்.

அத்துடன், தீர்மானிக்கப்படும் தினத்தன்று, கூட்டணி ஆவணத்தில் பங்காளி கட்சி தலைவர்கள் கையெழுத்திடுவதுடன் கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் பெயர் அறிவிப்பும் ஒருசேர நடைபெறும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .