2019 டிசெம்பர் 15, ஞாயிற்றுக்கிழமை

‘ஊழலற்ற நாட்டை உருவாக்கக் கூடிய ஒரே தலைவர் சஜித்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 13 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊழலற்ற நாட்டை உருவாக்குவதற்கான தகுதியுடைய தலைவரொருவர் ​தேவையென்றும், இதற்கு தகுதியுடைய தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸவே என, அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித்.பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸவை தெரிவு செய்வது தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் முழு நாட்டு மக்களும் விருப்பத்துடன் இருக்கின்றனரெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .