ஊழலை ஒழிக்கும் திட்டம் ஆரம்பம்

இலஞ்சம், ஊழல், மோசடி மற்றும் வீண்விரயங்களுக்கெதிரான விரிவான மக்கள் நிகழ்ச்சித் திட்டமொன்றை ஆரம்பிப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அண்மையில் வழங்கிய உறுதிமொழிக்கேற்ப, அனைத்து மக்களினதும் கருத்துகள், முன்மொழிவுகள் மற்றும் செயற்திறமான பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்கான நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தின் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்படும் இந்நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பொன்று, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (13) நடைபெற்றது. 

புதியதோர் யுகத்தை நோக்கி நாட்டைக் கொண்டுசெல்லும் வகையில் ஊழல், மோசடி, இலஞ்சம் மற்றும் வீண்விரயங்களுக்கெதிரான விரிவான அரசியல் மற்றும் சமூக கலாசாரத்தைக் கட்டியெழுப்புதல், ஆட்சிமுறைமையை வலுப்படுத்தல், சட்ட முறைமையையும், சட்ட நிறுவனங்களையும் முறைப்படுத்துதல் இந்நிகழ்சித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும். 

ஊழல், மோசடி, இலஞ்சம் மற்றும் வீண்விரயங்களை நாட்டிலிருந்து ஒழித்து, நாட்டை சுபீட்சமானதொரு தேசமாகக் கட்டியெழுப்பும் மக்கள் அரணின் ஒரு தூணாக இந்த தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் ஒன்றிணையுமாறு அனைவருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக, தமது கருத்துகள், முன்மொழிவுகளை 2018 மார்ச் மாதம் 01ஆம் திகதிக்கு முன்னர் ‘ஊழலுக்கெதிரான தேசிய நிகழ்ச்சித் திட்டம்’, ஜனாதிபதி அலுவலகம், கொழும்பு - 1 என்ற முகவரிக்கு அல்லது 011- 2431502 என்ற தொலைநகலின் ஊடாகவோ அல்லது zerocorruption@presidentsoffice.lk என்ற மின்னஞ்சலினூடாகவோ அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.   மேலதிக விவரங்களை 076 4654600 / 077 5770882 என்ற அலைபேசி இலக்கங்கள் ஊடாக அழைக்கவும்.


ஊழலை ஒழிக்கும் திட்டம் ஆரம்பம்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.