களனிவெளி ரயில் வீதிக்கு இரு தினங்கள் பூட்டு

களனிவெளி ரயில் வீதி மறுதினம் (16) இரவு 8 மணி தொடக்கம் எதிர்வரும்  19 ஆம் திகதி பிற்பகல் 4 மணிவ​ரை  முழுமையாக மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக, மேலதிக ரயில் பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த ரயில் வீதியில் உட்கட்டமைப்பு திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளமையின் காரணமாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய களனிவெளி ரயில் சேவைகள் எதிர்வரும் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களிலும் இடம்பெறாது எனவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


களனிவெளி ரயில் வீதிக்கு இரு தினங்கள் பூட்டு

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.