காணாமல் போனோர் அலுவலகத்தின் அடுத்த அமர்வு மாத்தறையில்

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் அடுத்த அமர்வு மாத்தறையில் எதிர்வரும் சனிக்கிழமை (19) இடம்பெறவுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் முதலாவது அமர்வு,  மன்னாரில் கடந்த 12ஆம் திகதி இடம்பெற்றது.

இதன்போது, காணாமல் போனோர் அலுவலகத்தின் திட்டப் பணிகளை பகிர்ந்துகொள்வதற்காகவும், அலுவலகத்தின் எதிர்காலப் பணிகளை ஒன்றிணைப்பதற்காகவும் பொது மக்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் கேட்டறியப்பட்டன.

குறித்த சந்திப்பில். ஊடகத்துறையினர், காணாமல் போனவர்களின் உறவினர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் காணாமலாக்கப்பட்ட விடயங்கள் தொடர்பிலான செயற்பாட்டாளர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில் இதன் அடுத்த அமர்வு மாத்தறையில் இடம்பெறவுள்ளதோடு, காலை 9.30க்கு காணாமல் போனவர்களின் உறவினர்களையும்,  முற்பகல் 11.30 மணிமுதல் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் காணாமலாக்கப்பட்ட விடயங்கள் தொடர்பிலான செயற்பாட்டாளர்களையும் அலுவலக அதிகாரிகள் சந்திப்பார்கள் என தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   

இதன்போது, காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தலைமையில், அலுவலகத்தின் ஆணையாளர்களான ஜெயதீபா புண்ணியமூர்த்தி, மேஜர் ஜெனரல் மொஹான் பீ பீரிஸ், கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ, மிராக் ரஹீம், சட்டத்தரணி சோமசிறி லியனகே மற்றும் கணபதிப்பிள்ளை வேந்தன் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.


காணாமல் போனோர் அலுவலகத்தின் அடுத்த அமர்வு மாத்தறையில்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.